செவ்வாய், 11 ஆகஸ்ட், 2009

பேசுதல்(Sec 1NA)

மாணவர்களே! உங்கள் வகுப்புத் தோழர்கள் அல்லது தோழிகள் பேசிப் பதிவு செய்த பகுதியைக் கவனமாகக் கேளுங்கள். அதனை மதிப்பீடு செய்து உங்கள் கருத்துகளைத் தெரிவிக்கவேண்டும்.

அதன்பின்னர், கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளின் அடிப்படையில் சரியான அளவில் மதிப்பெண்களைத் தரவேண்டும்.

மதிப்பெண்கள் வழங்குவதற்கான குறிப்புகள்:

1. உச்சரிப்புப் பிழையின்றி பேசுவதற்கு 5 மதிப்பெண்கள் வழங்குக. உச்சரிப்புப் பிழையோடு பேசினால் பிழைகளுக்கு ஏற்ப 5 மதிப்பெண்கள்வரை குறைக்கலாம்.

2. சரியான வேகத்தில் தடுமாற்றமின்றிப் பேசினால் 5 மதிப்பெண்கள் வழங்குக. மெதுவாகவும் தடுமாற்றத்துடனும் பேசினால் 5 மதிப்பெண்கள்வரை குறைக்கலாம்.

3. குரல் ஏற்ற இறக்கத்துடன் உயிரோட்டமாகப் பேசினால் 5 மதிப்பெண்கள் வழங்குக. குரல் ஏற்ற இறக்கமின்றிப் பேசினால் 5 மதிப்பெண்கள்வரை குறைக்கலாம்.

பிரவின் 1 வழக்கம்:

பிரவினைத் தவிர மற்றவர்கள் பகுதியைக் கவனமாகக் கேளுங்கள். உங்களுடைய கருத்துகளையும் மதிப்பெண்களையும் (15 மதிப்பெண்கள்)Comments என்ற சொல்லைக் கிளிக் செய்து பதிவு செய்யவும்.


விஜய் 1 வழக்கம்:

விஜயைத் தவிர மற்றவர்கள் பகுதியைக் கவனமாகக் கேளுங்கள். உங்களுடைய கருத்துகளையும் மதிப்பெண்களையும் (15 மதிப்பெண்கள்)Comments என்ற சொல்லைக் கிளிக் செய்து பதிவு செய்யவும்.


பவனேஸ்வரி 1 வழக்கம்:

பவனேஸ்வரியைத் தவிர மற்றவர்கள் பகுதியைக் கவனமாகக் கேளுங்கள். உங்களுடைய கருத்துகளையும் மதிப்பெண்களையும் (15 மதிப்பெண்கள்)Comments என்ற சொல்லைக் கிளிக் செய்து பதிவு செய்யவும்.






மாணவர்களே! கீழ்க்காணும் படக்காட்சியைப் பாருங்கள். வினைச்சொல், வினைமுற்றுகளைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள். வீட்டுப்பாடம் செய்து தவறாமல் ஒப்படைக்கவும்.இந்தப் படக்காட்சிக்கு comments தரவேண்டாம்.